த்ரிஷா விவகாரம்: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த மன்சூர் அலிகான்..!

வியாழன், 23 நவம்பர் 2023 (09:48 IST)
நடிகை த்ரிஷா விவகாரத்தில் தான் கைது செய்வோம் செய்யப்படலாம் என்று  மன்சூர் அலிகான் எண்ணுவதால் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டதால் தற்போது அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்  மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த முன்ஜாமீன் மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்