தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் . இந்த நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரித்த படம் லியோ. இப்படத்தில் நடிகர், விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதில், 'மன்சூர் அலிகான் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது பேச்சு சமத்துவம், மரியாதை ஆகியவற்றிக்கு எதிராக உள்ளது. அவரின் மரியாதை குறைவாக பேச்சை நாங்கள் கண்டிப்பதாக' தெரிவித்துள்ளது.