மீண்டும் ஒரு பிரமாண்டம்! ரஜினி, கமலை இயக்கும் லோகேஷ்?

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:48 IST)
தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் குருகுலத்தில் இருந்து வந்து இன்று உச்ச  நட்சட்திரங்களாக ஜொலிப்பவர்கள் ரஜினி, கமல்.

இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அப்படங்களும் பெரிய வெற்றி பெற்றன. அதன் பிறகு இருவரும் தனிதனியே தங்கல் ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்தனர். இதில், இருவரும் வெற்றி பெற்றனர்.

இனி இருவரும் இணைந்து நடிப்பார்களா என கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடித்தனர். இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டியது.

இந்த  நிலையில், மீண்டும் லோகேஷ் இயக்கத்தில், கமல் –ரஜினிஆகிய இருவரும் இணைந்து ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இப்படத்தையும் கமலின் ராஜ்கால் இண்டர்னெஷனல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்