சூர்யாவுக்கு நன்றி கூறிய சாய்பல்லவி...

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:40 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சாய் பல்லவி , நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கார்கி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுது. இந்த படத்தை தற்போது சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்ததால், ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

இப்படம் வரும், ஜூலை 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பாசிட்டிவான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நடிகை சாய்பல்லவி மீண்டும் நடிகர் சூர்யாவுக்கு  நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சார் உங்கள் உதவியால்தான் கார்க்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. ஜோதிகா மேடத்திற்கும் என்  நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்