வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்: ஹீரோ அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (18:42 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மூக்குத்தி அம்மன் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது ஜீவா நடித்து வரும் "ஜெனி" என்ற படத்தை தயாரித்து கொண்டிருப்பதுடன், அடுத்ததாக "அகத்தியர்" என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மர்மங்கள் மற்றும் வரலாற்று கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். மேலும், ராஷி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கவிஞர் பா விஜய் இயக்குவதாகவும், யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தின் போஸ்டர் ரெடியாகி உள்ளது; அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் "அகத்தியா" திரைப்படம் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜீவா நடித்துள்ள "பிளாக்" என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்