தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே ரிலிஸ் ஆகும் அண்ணாத்த!

வியாழன், 21 அக்டோபர் 2021 (09:50 IST)
தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கபப்ட்டுள்ள அண்ணாத்த திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் ஒரு நாள் முன்னதாகவே ரிலிஸ் ஆக உள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

உலகெங்கும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மட்டும் ஒரு நாள் முன்னதாகவே நவம்பர் 3 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்