நமக்கு தீபாவளி 25ம் தேதி.. கவலப்படாதீங்க சிம்பு ஃபேன்ஸ்! – ஆறுதல் சொன்ன வெங்கட்பிரபு!

திங்கள், 18 அக்டோபர் 2021 (13:34 IST)
மாநாடு தீபாவளி ரிலீஸில் இருந்து வெளியேறிய நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு ஆறுதல் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் மாநாடு. சயின்ஸ் பிக்‌ஷன் டைம் லூப் கான்செப்ட் படமான இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு படம் முழுவதும் தயாராகியுள்ள நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளியை டார்கெட் செய்து ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் தற்போது திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு தீபாவளி ரிலீஸில் இருந்து வெளியேறுவதாகவும், நவம்பர் 25ம் தேதி படம் வெளியாவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் தீபாவளிக்கு படம் வெளியாகாது என்பது சிம்பு ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு ”நமது தீபாவளி நவம்பர் 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று பாசிட்டிவாக பதிவிட்டுள்ளார். அதில் சிம்பு ரசிகர்களையும் ஹேஷ்டேகில் சேர்த்து அவர் இவ்வாறு சொல்லியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்