அண்ணாத்த படப்பிடிப்பு முடியும் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (18:16 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இப்போது சென்னையில் சில நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தேர்தலில் வாக்களித்த பின்னர் ரஜினிகாந்த் ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம். அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே 10 ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்