’’அண்ணா யாரு தளபதி…’’ அமீரக நாட்டில் மாஸ்டர் படம் இமாலய சாதனை !

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (21:25 IST)
விஜய் படம் உலக அளவில் சாதனை நிகழ்த்தியுள்ள அதே நேரம் சவூதி அரேபியாவில் சப்தமில்லாமல் இமாலய சாதனை நிகழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா  மோகனன் நடித்திருந்தார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ஒரே வாரத்தில் 150 கோடி வசூல் செய்துள்ளது.

இதுகுறித்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த இளம் நடிகரும், விஜய்யின் தீவிர ரசிகருமான நடிகர் மகேந்திரன்  இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’அண்ணா யாரு தளபதி’’ என டுவிட் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும்  மாஸ்டர் படக்குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்குள்ள தியேட்டர்களில் விசிட் அடித்து வருகின்றனர்,. விஜய் சமீபத்தில் தேவி தியேட்டருக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்