அஞ்சலி நடிக்கும் ‘ரோசாப்பூ’

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (19:13 IST)
அஞ்சலி நடிப்பில் ‘ரோசாப்பூ’ என்ற மலையாளப் படம் தயாராகிறது.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்கள் மட்டுமின்றி, ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள அஞ்சலி, அவ்வப்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்துவருகிறார். இதுவரை ‘பையன்ஸ்’ என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.
 
அதன்பிறகு எந்த மலையாளப் படத்திலும் நடிக்காத அஞ்சலி, 6 வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்கிறார். ‘ரோசாப்பூ’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை, வினு ஜோசப் இயக்குகிறார். பிஜு மேனன் மற்றும் நீரஜ் மாதவ் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். தமீம் ஃபிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் ஷிபு தமீம்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்