அமலா பாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்

வெள்ளி, 24 நவம்பர் 2017 (14:09 IST)
திருமணத்துக்குப் பிறகும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு வருகிறார் அமலா பால்.
கேரளாவைச் சேர்ந்த அமலா பால், இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற இருவரும், தனித்தனியாக வசித்து வருகின்றனர். அதன்பிறகு நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால்.
 
பொதுவாக, ஒரு நடிகைக்குத் திருமணமாகிவிட்டாலே அவருக்கு மார்க்கெட் போச்சு என்பார்கள். ஆனால், விவாகரத்துக்குப் பின்னும் நிறைய படங்களில் அமலா பால் நடித்து வருவது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தமிழில் நான்கைந்து படங்களைக் கைவசம் வைத்திருக்கும் அமலா பால், மலையாள முன்னணி நடிகரான நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்