உலகமே வீட்டில் இருக்கும் போது நாங்கள் மட்டும் உழைக்கிறோம் - அனிதா சம்பத் வருத்தம்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (13:39 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர்.  இவர் தற்போது எமெர்ஜென்சி என்ற வெப் சீரிஸ் ஒன்றில்  நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவில் உலகமே வீட்டில் இருக்கும் போது ஊடக நண்பர்கள் தங்கள் உயிரை துட்க்ஷம் என எண்ணி அயராது வேலைபார்த்து வருகிறார்கள். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத் " உலகமே lockdown இல் இருக்கும் போது, ஊடக வியலாளர்கள் உயிரை பொருட் படுத்தாமல் நாங்கள் தினமும் வேலைக்கு செல்கிறோம். எங்களை போற்றவில்லை என்றாலும், தூற்ற வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் திசை திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்