அட்லி-ஷாருக்கான் படத்திற்கு அனிருத் இசையா?

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (19:24 IST)
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்க இருக்கும் திரைப்படத்தை ஏஆர் ரகுமான் இசை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஷாருக்கான் அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே டீசர் தயாராகி வருகிறது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த டீசருக்கு பின்னணி இசை அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தான் என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆனால் படக்குழு வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி ஏஆர் ரகுமான் பாடல் கம்போஸ் செய்து கொடுப்பார் என்றும் அனிருத் பின்னணி இசையை அமைத்துக் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்