விஷாலின் ’எனிமி’ பட 2 வது சிங்கில் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (19:10 IST)
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ’எனிமி’ படத்தின் 2 வது சிங்கில் #TumTum வெளியாகியுள்ளது.  

விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நெருங்கிய நண்பர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் எதிரெதிர் துருவங்களாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில், தமன் இசையில் உருவாகியுள்ள ’எனிமி’ படத்தின் 2 வது சிங்கில் Tum Tum என்ற பாடல் இன்று  மாலை 6 மணிக்கு ரீலிஸாக உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்படி நடிகர் விஷால் மற்றும் ஆர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் #TumTum என்ற 2 வது பாடலை வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்