நீ ஹீரோயின் ஆகிட்டா தாங்க முடியாது தாயே - அலறவுடும் அனிகா!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:21 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதையடுத்து  மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.


இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா தற்ப்போது  வழக்கம் போலவே பெரிய பெண் போன்று புடவை அணிந்து அழகிய போட்டோ ஷூட் நடத்தி ஹீரோயின் ரேஞ்சிற்கு இளசுகளை வளைத்து இழுத்துவிட்டார். பாப்பாவுக்கு 16 வயது ஆகுது இப்போவே இப்படின்னா அப்போ இன்னும் பெரிய பொண்ணு ஆகிட்டால் எப்படிலாம் போஸ் கொடுப்பங்களோ...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்