இதுதான் லிமிட்…. அதைத் தாண்டமாட்டேன் – ஆண்ட்ரியாவுக்கு இப்படி ஒரு நல்ல பழக்கமா?

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:56 IST)
நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே தனது சம்பளத்தை  20 லட்சத்துக்கு மேல் அதிகமாக வாங்கியதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் தயாரிக்கப்படும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் பட்ஜெட் தாறுமாறாக எகிறுவதற்கு முக்கியக் காரணமே நடிகர், நடிகைகளின் அதிகளவிலான சம்பளமே. ஒரே ஒரு ஹிட் படத்தில் நடித்துவிட்டால் போதும், பல மடங்கு சம்பளத்தை உயர்த்துவது அவர்களின் வழக்கம். ஆனால் தாங்கள் நடிக்கும் சில படங்கள் வரிசையாக தோல்வியடைந்தாலும் சம்பளத்தைக் குறைப்பதில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் பாராட்டும் விதமாக நடிகை ஆண்ட்ரியா பல வருடங்களாக தனது சம்பளத்தை 20 லட்ச ரூபாய்க்கு மேல் உயர்த்தவில்லையாம். இது அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஆண்ட்ரியாவின் இந்த பெருந்தன்மை மற்ற நடிகர் நடிகைகளும் பின்பற்ற வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்