அண்டாவில் பால் அபிஷேகம்: நான் சொன்ன அர்த்தம்வேறு! அந்தர் பல்டியடித்து மன்னிப்பு கேட்ட சிம்பு
அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என சிம்பு கூறியதை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எழுமின் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நான் பால் அபிஷேகம் மற்றும் கட் அவுட் என எதுவே வேண்டாம் என கூறினேன். என் மீது உள்ள அன்பில் ரசிகர் ஒருவர் பாலபிஷேகம் செய்வார். அவர் உயிர் இழந்த பிறகு எனக்கு மனவேதனை இருந்ததால் கட் அவுட் மற்றும் பால் அபிஷேகம் வேண்டாம் என கூறினேன். ஆனால் நான் கூறியது சரியாக மக்களிடம் போய் சேரவில்லை. அதன் பிறகு கட் அவுட் மற்றும் பேனர் வேண்டாம் அப்பா மற்றும் அம்மாவுக்கு துணி எடுத்துக் கொடுங்க என்று சொன்னேன். ஆனால் அதுவும் போய் சேரவில்லை. இதனால் நெகட்டிவாக மற்றொரு வீடியோவை போட்டேன். அதில் அண்டா, அண்டாவாக பால் ஊற்றுங்கள், பேனர் வையுங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு தான் மக்களிடம் போய் சேர்ந்தது. நான் அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன், கட் அவுட்டுக்கு பால் ஊற்ற சொல்லவில்லை. பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் மனமாவது என் கருத்தால் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.