நடிகர் சிம்பு தான் நடித்து வரும் "வந்தா ராஜாவா தான் வருவேன்" படத்தின் ரிலீஸின் போது தனக்கு கட் அவுட் வையுங்கள், அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என பேசி சர்ச்சை வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் "அதிரண்டிகி தாரடி" என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகிவருகிறது. இப்படம் வரும் பிப்.1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான போஸ்ட் புரொக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ’வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது படக்குழுவுக்கு மட்டுமல்லாது சிம்புவின் ரசிகர்களுக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படக்குழுவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.