நடுக்கடலில் கெத்து காட்டிய சிம்புரசிகர்கள்

ஞாயிறு, 27 ஜனவரி 2019 (20:27 IST)
அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியானபோது அவரது ரசிகர்கள் புதுவை அருகே நடுக்கடலில் பேனர் கட்டி அசத்தினர். இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
 
இந்த நிலையில் அஜித் ரசிகர்களை அடுத்து தற்போது சிம்பு ரசிகர்களும் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் பேனரை விஸ்வாசம் பேனர் வைத்த அதே நடுக்கடலில் வைத்து கெத்து காட்டியுள்ளனர். 
 
ஏற்கனவே 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு வேற லெவலில் பேனர் வைக்க வேண்டும், என்றும், அண்டா அண்டாவாக பால் ஊற்ற வேண்டும் என்றும் ரசிகர்களை சிம்பு உசுப்பேற்றியுள்ளதால் சிம்பு ரசிகர்கள் படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் இப்போதே பேனர், கட் அவுட்டுக்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதே ரீதியில் சென்றால் படம் வெளியாகும் தினத்தில் சிம்பு ரசிகர்கள் படத்திற்கு அளிக்க போகும் வரவேற்பு பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்