தமிழ் சினிமாவில் திகில் படத்தில் களமிறங்கும் பெண் இயக்குநர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:46 IST)
தமிழ் சினிமாவில் இன்னுமொரு புதிய பெண் இயக்குநர் களமிறங்குகிறார் ஜெஎம் நூர்ஜஹான். கரிக்காட்டுக் குப்பம் என்ற  படத்தை முதல் முறையாக இயக்குகிறார்.

 
இப்படத்தில் அபிசரவணன் - ஸ்வேதா நடிக்கும் இந்தப் படத்தை ஆடியன்ஸ் க்ளாப்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜெஎம் நூர்ஜஹானே  தயாரிக்கிறார். கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த கரிக்காட்டுக் குப்பம் உருவாகிறது.
 
சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் ஈசிஆரில் அதிகளவு விபத்துக்கள், பலிகள் நடப்பதாகவும்  கூறப்படுகிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கரிக்காட்டுக் குப்பம் உருவாகிறது. படத்தின் தொடக்க விழா படம் பற்றி பேசிய நூர்ஜஹான்,  "இன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு மும்பே காதல் என்கிற மாயையில்  விழுந்து விடுகிறார்கள். தன் காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப்  படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப்பட்டு கடன்  வாங்கி, வாங்கிக் கொடுத்த பைக்கில் காதலிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள்.
 
அப்படி ஒரு காதலர்களுக்கு ஏற்பட்ட விபத்தில் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை பற்றி, திகில் கலந்த படமாக 'கரிக்காட்டுக் குப்பம்' உருவாகிறது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்