பிரான்ஸில் காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், தமன்னா, பருல் யாதவ்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:37 IST)
‘குயின்’ படத்தின் ரீமேக்கிற்காக 4 நடிகைகள் ஒரே நேரத்தில் பிரான்ஸுக்குச் சென்றுள்ளனர்.



 

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹிந்திப் படம் ‘குயின்’. இந்தப் படத்தை, 4 தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர். கங்கனா ரனாவத் கேரக்டரில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவ்வும் நடிக்கின்றனர்.

4 மொழி படப்பிடிப்புமே தற்போது பிரான்ஸில் தனித்தனியாகத் தொடங்கியுள்ளது. இதற்காக நான்கு ஹீரோயின்களுமே தற்போது பிரான்ஸில் இருக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்குகிறார் ரமேஷ் அரவிந்த்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்