ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பது ஏழுமலையான் கோவிலில் இன்று கருட சேவை நடைபெற்றது. ஆனால் கொரொனா தொற்றுப் பரவல் தாக்கத்தால், வரலாற்றிலே முதன் முறையாக பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு வருகை தந்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தார். இதையடுத்து அவருக்கு ஆஞ்சநேயர் கோவில் அருகில் பரிவட்டம் கட்டப்பட்டது. தன் தலையில் சுமந்து வந்த பரிவட்டத்தை ஜெகன் மலையப்ப சுவாமிக்கு அணிவித்தார்.