பார்ன் படங்கள் என் மூளையை பாதித்தன… பிரபல பாடகி கருத்து!

வியாழன், 16 டிசம்பர் 2021 (19:41 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி பில் எய்லிஷ் 7 எம்மி விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

19 வயதே ஆகும் பில் எய்லிஷ் இதுவரை தனது பாடல்களுக்காக 163 விருதுகளைக் குவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் உலகில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் சிறுவயதிலேயெ போர்னோகிராபி வீடியோக்களை பார்த்ததால் தன்னுடைய மூளை பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘நான் எனது 11 வயதில் போர்னோகிராபி பார்க்க ஆரம்பித்தேன்.இதனால் என் மூளை பாதிக்கப்பட்டு நான் பல நேரங்களில் ஆபாசமாக நடந்துகொண்டுள்ளேன். அதில் இருந்த காட்சிகள் என்னை பாதித்தன.  அதிகமாக போர்ன் படங்கள் பார்த்தால் உங்களால் இயல்பாக உடலுறவை அனுபவிக்க முடியாது.முதலில் இது கெட்ட பழக்கம் என்று நான் அறியவில்லை. உடலுறவைப் பற்றி அறியும் ஒரு கல்வியாகதான் நான் அதைப் பற்றி நினைத்தேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்