நிழலுலக தாதாவால் கொல்லப்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர் பயோபிக்கில் அமீர்கான்!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:54 IST)
தயாரிப்பாளரான குஷால் குமார் பயோபிக் படத்தில் அமீர்கான் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

அமீர்கான் இப்போது லால் சிங் சட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப்பின் ரீமேக்காகும். இந்நிலையில் இந்த படத்துக்குப் பின் அமீர்கான் டிசீரிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமார் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். கொரோன காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் தொடங்கும் என குஷால் குமாரின் மகன் பூஷன் குமார் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபராக இருந்த குஷால் குமார் நிழலுலக தாதாக்களால் 1997 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்