அமலா பால் படத்தை வாங்கிய ஜீ தமிழ் டிவி

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (13:26 IST)
அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் டிவி  வாங்கியுள்ளது.
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்கியுள்ளார். மம்மூட்டி வேடத்தில்  அரவிந்த் சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடித்துள்ளனர். இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களாக இருவரும்  நடித்துள்ளனர்.
 
இந்தப் படம், வருகிற பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால், ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகை கொடுத்து ஜீ தமிழ் டிவி  வாங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்