பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறாரா நடிகை அமலா பால்?... வாய்ப்புகள் இல்லாததால் எடுத்த முடிவு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (15:46 IST)
நடிகை அமலா பால் தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

இதற்கிடையில் 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தற்போது அவர் விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்