அஜித்தின் பாலிசியை பின்பற்றும் அமலா பால்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (18:55 IST)
நடிகை அமலா பால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்த படம் கர்நாடகா, கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக காடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. முழுப் படமும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், இந்த படத்திற்காக அமலா பால் பல சவாலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளாராம். குறிப்பாக ரிஸ்கான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் வைத்து கொள்ளலாம் என்று கூறியும் அமலாபால் டூப் போட அவர் மறுத்துவிட்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
 
நடிகர் அஜித்தும் இப்படிதான் ரிஸ்க் காட்சிகளுக்கு டூப் போடாமல் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்