திருமணத்துக்கு பின்னர் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வந்த அமலாபால், விவாகரத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
தமிழில் அறிமுகம் ஆன முதல் படத்திலே கவர்ச்சியாக நடித்ததுடன், சர்ச்சையாக கதாபாத்திரத்திலும் நடித்தார். இயக்குனர் விஜயுடன் திருமணமான பின்னர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து வந்தார்.
அண்மையில் அமலாபால், விஜய் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ முடிவெடுத்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் கவர்ச்சி கடலில் இறங்க முடிவு செய்துள்ளாராம். தற்போது நடித்து வரும் வடசென்னை படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.