தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் அடைந்த வளர்ச்சி என்பது யாராலும் நம்ப முடியாதது. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அவர் தற்போது ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
அந்த வகையில் இந்தி படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் ஒருமுறை அமீர்கான் சாரை சந்தித்தேன். அவர் என்னிடம் உங்களுடைய முதல் இந்தி படம் என்னுடைய தயாரிப்பில்தான் இருக்கும். நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் விரைவில் இந்தி படத்தில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.