“நயன்தாராவுடன் டூயட் பாட ஆசை” – சூரி

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (12:00 IST)
நயன்தாராவுடன் டூயட் பாட ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் சூரி.


 

 
‘காதல்’, ‘தீபாவளி’, ‘ஜி’ படங்களில் சின்ன வேடத்தில் தலைகாட்டி சினிமாவுக்கு வந்தவர் சூரி. ‘தீபாவளி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுசீந்திரன், தன்னுடைய ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில், காமெடியனாக சூரியை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி, இன்னைக்கும் ரசித்துச் சிரிக்கிற நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.கடந்த வருடம் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி, பரோட்டா காமெடியையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருந்தது. அதுவரை ‘பரோட்டா’ சூரியாக இருந்தவர், அந்தப் படத்துக்குப் பிறகு புஷ்பா புருஷனாக மாறினார்.

இந்நிலையில், சூரி ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் வதந்திகள் கிளம்பின. “ஹீரோ ஆசையெல்லாம் எனக்கு வந்ததே கிடையாது. நயன்தாராவுடன் டூயட் பாடி நடிக்க ஆசைதான். ஆனா, அதுக்கு அவங்க ஒத்துக்கணுமே..? இதைக்கேட்டு கேஸ் போடாம இருந்தாலே பெரிய விஷயம்” என தனக்கே உரித்தான நகைச்சுவை சிரிப்போடு சொல்கிறார் சூரி.
அடுத்த கட்டுரையில்