தனது அடுத்த படத்தை தமிழில் இயக்கும் அல்போன்ஸ் புத்ரன்… ஹீரோ இவரா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:31 IST)
நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய  கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படம் எந்தவித ப்ரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பின. விமர்சனங்களைக் கடந்து செல்லாமல் அதற்கு பதிலளிக்கிறேன் என சமூகவலைதளங்களில் அல்போன்ஸ் பதிவிட்ட கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பின.

இந்நிலையில் இப்போது அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை தமிழில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு காதல் படம் என்றும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்