தெலுங்கு ஹீரோவுக்குக் கதை சொல்லி சம்மதம் வாங்கிய முருகதாஸ்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:01 IST)
அல்லு அர்ஜுனிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளாராம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற இப்போது நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில் முருகதாஸ் விஜய்க்காக அவர் உருவாக்கிய கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இரு தரப்பும் மறுத்தது.

இந்நிலையில் இப்போது அவர் அல்லு அர்ஜுனுக்குக் கதை சொல்லியுள்ளாராம். அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவரின் மார்க்கெட் பல மடங்கு விரிவடைந்துள்ளது.  இதனால் அவரை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இயக்க ஏ ஆர் முருகதாஸ் கதை சொல்ல அல்லு அர்ஜுனும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்