ரிலீஸுக்கு முன்பே 900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’

vinoth

வியாழன், 17 அக்டோபர் 2024 (14:54 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்பே சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேட்டிலைட், டிஜிட்டல் ஆகியவற்றின் மூலம் படத்துக்கு மிகப்பெரிய வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்