புஷ்பா 2 ஷூட்டிங் நிறைவு எப்போது?... வெளியான தகவல்!

vinoth

வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:12 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதற்குக் காரணம் ஷூட்டிங் சம்மந்தமாக இயக்குனர் சுகுமாருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு பின்னர் ஷூட்டிங் நடந்தது. இந்நிலையில் இன்று இறுதிகட்ட ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் அக்டோபர் 10 ஆம் தேதி படத்தின் ஷூட்டிங்கின் நிறைவடையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்