10 ஏக்கரில் சினிமா ஸ்டுடியோ கட்டியுள்ள புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன்!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (09:23 IST)
புஷ்பா படம் மூலமாக இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராகி உள்ளார் அல்லு அர்ஜுன்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.  இதனால் இப்போது இந்தியா முழுவதும் அறியப்படும் நபராகி உள்ளார் அல்லு அர்ஜுன்.

இவர்கள் குடும்பமே திரைப்பட தொழிலின் பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஆஹா ஓடிடி ஆகியவை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் உடையதுதான். இந்நிலையில் இப்போது அல்லு அர்ஜுன் ஆந்திராவில் 10 ஏக்கர் பரப்பளவில் ‘அல்லு ஸ்டுடியோஸ்’ எனும் படப்பிடிப்புத் தளத்தை நிறுவியுள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி அவரின் தாத்தாவின் பிறந்தநாளின் போது இந்த ஸ்டுடியோ திறக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்