நடிகை ஆலியா பட் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்டுள்ளார்.
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலிஸ் தேதி அக்டோபர் 13 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் பல்வேறு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் பட ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதில் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களையும் உள்ளடக்கி ஒரு பாடலை படமாக்க இருந்தாராம். ஆனால் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் படப்பிடிப்பின் போது இருக்கும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என முடிவு வந்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என சொல்லிவிட்டாராம்.
இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒரு வழியாக ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுளாராம் ஆலியா பட். அங்கு அவர் சம்மந்தப்பட்ட மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.