தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
இதை விறுவிறுப்பாக நடத்தி முடித்து ஆயுத பூஜை விடுமுறைக்கு ரிலிஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்தது. ஆனால் இன்னும் படத்தின் பணிகள் முடியாததால் எப்படியும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.