தன்னை தானே செதுக்கிக் கொண்டவர் பிரதமர் மோடி! – அக்‌ஷய் குமார் புகழாரம்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (17:27 IST)
இந்தியில் பிரபல நடிகராக உள்ள அக்‌ஷய் குமார், பிரதமர் மோடியை நேர்காணல் செய்தது குறித்த தனது அனுபவங்களை பேசியுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக பதவியில் உள்ள பிரதமர் மோடி இதுவரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தியதில்லை. கடந்த 2019ம் ஆண்டு இந்தி நடிகர் அக்‌ஷய்குமாருக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றுதான் இதுவரை அவர் அளித்துள்ள ஒரே நேர்காணல்.

இந்நிலையில் அந்த நேர்காணல் அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ள அக்‌ஷய் குமார் “எல்லாரையும் போல பிரதமரிடம் அவரது கொள்கைகள் பற்றியே கேட்டால் எனக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? அது என் வேலையல்ல. நான் பிரதமரிடம் ஒரு சாமானியனாக எனது இதயத்திலிருந்து பேசினேன்.

பிரதமரிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் தன்னை தானே மாற்றிக் கொள்ள அவருக்கு நன்றாக தெரியும். என்னிடம் பேசும்போது அதற்கேற்றவாறு இருப்பார். குழந்தைகளிடம் பேசும்போது குழந்தையாகவே மாறி போவார். தன்னை தானே வடிவமைத்துக் கொள்ளும் திறன் அவருக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்