மீடூ: என்னை ஏன் இப்படி செய்தார்கள்...! அக்‌ஷரா ஹாசன்உருக்கம் !

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (15:54 IST)
எனது அந்தரங்க புகைப்படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் ஷேர் செய்யும்போது நான் மிக ஆழமாக காயப்படுத்தப்படுகிறேன் என ட்விட்டரில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்‌ஷரா ஹாசன்.
நடிகை அக்‌ஷரா ஹாசன் தற்போது ராஜேஷ் எம்.செல்வா இக்யக்கத்தில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இது தொடர்பாக உருக்கமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை யார் எதற்காக செய்தார்கள் என இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, சில குறுகிய மனப்பான்மையுடையவர்களால், துரதிஷ்டவசமாக ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள். கவனம் பெறவேண்டும் என்பதற்காக அது கவரக்கூடிய தலைப்புடன் பகிரப்படும் போது, இன்னும் அதிக பயத்தை உண்டாக்குகிறது. 
 
இந்த தேசமே மீடூ என்ற ஓர் இயக்கத்துக்கு விழித்துக் கொண்டிருக்கும் சூழலில் கூட சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் ஒரு இளம் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்து அதன் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர்.
 
மேலும் என்னுடைய புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக நான் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளேன். அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை, நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். 
 
இணையவாசிகள் எனது புகைப்படங்களைப் பகிர்ந்து என்னை இழிவுபடுத்துவதில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டாம் எனக் கேட்கின்றேன். வாழுங்கள் மற்றவர்களையும் மரியாதையுடன் அவர்களது தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறாமல் வாழவிடுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்