உங்க வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட ஆரம்பிச்சிட்டாங்கன்னா அதான் அர்த்தம் –சிவகார்த்திகேயனைப் பாராட்டிய அஜித்!

vinoth
சனி, 19 அக்டோபர் 2024 (07:30 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு சாய்பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் “சமீபத்தில் அஜித் சாரை சந்தித்தேன். அப்போது அவர் வெல்கம் டு பிக் லீக் என்றார். என்ன சார் சொல்றீங்க என்றேன். அதற்கு அவர் ‘உங்கள் வளர்ச்சியைப் பார்த்து சிலர் பொறாமைப்படுறாங்கன்னா, நீங்க பெரிய லீக்கில் இருக்கீங்கன்னுதான் அர்த்தம்.” என  சொன்னார்” என பதிலளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்