சிவகார்த்திகேயனை இயக்குவது எப்போது?... அமரன் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் பதில்!

vinoth

சனி, 19 அக்டோபர் 2024 (07:26 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு சாய்பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் “நீங்க பலபேரை டானாக காட்டி படம் இயக்கியுள்ளீர்கள்.. எங்க டானை (சிவகார்த்திகேயன்) எப்போது உங்கள் படத்தில் நடிக்க வைக்க போகிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் “நிறைய பேசியிருக்கோம். சீக்கிரமே நடக்கும். அதான் துப்பாக்கிய வாங்கிட்டாருல்ல” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்