3 தங்கம், 4 சில்வர்... சாதனை படைத்த அஜித்!!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:01 IST)
டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார் நடிகர் அஜித். 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ், போன்றவற்றில் எந்தளவு ஆர்வமுடன் உள்ளாரோ அதேபோல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தார்.
 
ஆம், சென்னையில் ரைபிள் கிளப்பில் 2019 ஆண்டு முதல் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 சில்வர் மெடல் பெற்று சாதனை படைத்துள்ளார். 
 
சீனியர் பிரிவில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார், 25 மீட்டரில் 3 தங்கம், 10 மீட்டரில் 2 சில்வர், 15 மீட்டரில் 2 சில்வர் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்