வலிமை திரைக்கதைக்காக அஜித் வெயிட்டிங்… ஹெச் வினோத் தாமதம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:36 IST)
அஜித் 61 படத்தின் திரைக்கதையை முடிக்கும் பணிகளை ஹெச் வினோத் இப்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

வழக்கமாக ஷூட்டிங்குக்கு முன்பாக முழுமையான திரைக்கதை பிரதியை அஜித் இயக்குனர் வினோத்திடம் கேட்டாராம். ஆனால் இன்னும் திரைக்கதை முடியாததால் தீவிரமாக எழுதி வருகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் படப்பிடிப்புக்கு தேவையான அரங்குகளை அமைக்கும் பணியும் நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்