சைதை துரைசாமி வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அஜித்.. வைரல் புகைப்படம்..!

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (15:18 IST)
ajith vetri2

 முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் நடந்த கார் விபத்தில் காலமான நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் அஜித் சென்னையில் உள்ள வெற்றி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் மற்றும் வெற்றி துரைசாமி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் வெற்றி துரைசாமி அவ்வப்போது அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வெற்றி துரைசாமி  விபத்து ஒன்றில் காலமானதை அடுத்து அவருடைய உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் அஜித் ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ALSO READ: டெல்லியிலும் இந்தியா கூட்டணி இல்லை.. 6 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி..!

Edited by Siva
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்