மீண்டும் அஜர்பைஜான் செல்லும் விடாமுயற்சி படக்குழு… எப்போது தெரியுமா?

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (08:22 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நினைத்தபடி ஷூட்டிங் முடியாததால் இப்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். இதனால் ரசிகர்களும் விடாமுயற்சி படத்தைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளில் நடித்து முடித்த அஜித்,மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம். இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித் மீண்டும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்