இனிமே ரேஸின் போது சினிமா கிடையாது… அஜித்குமார் உறுதி!

vinoth

சனி, 17 மே 2025 (09:02 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் அளித்துள்ளார். அதில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் “நான் முன்பெல்லாம் ரேஸ் மற்றும் சினிமா என இரண்டையும் ஒன்றாக செய்தேன். அதனால் ரேஸ் முடிந்ததும் படப்பிடிப்புக்காக ஓடவேண்டிய அவசரம் இருக்கும். அதனால் சில இடையூறுகள் எழுந்தன.அதனால் இப்போது ரேஸின் போது சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். நவம்பர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன். மீதமுள்ள மாதங்களில் ரேஸில் கவனம் செலுத்துவேன். என்னிடம் இருந்து ஆண்டுக்கு ஒரு படம் வரும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்