ஆனால் கைதுக்கு பின்னர் இருவரும் சினிமா வாழ்க்கை தேய்பிறையாக சென்று முடிந்தது. இந்நிலையில் இப்போது இந்த லஷ்மிகாந்தனின் கொலையை பற்றி தமிழில் ஒரு வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கவனம் பெற்ற இயக்குனர் சூர்யபிரதாப் இந்த தொடரை இயக்குகிறார். இந்த சீரிஸை பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் சோனி லிவ் தளத்துக்காகத் தயாரிக்கிறார். இதற்கிடையில் இந்த சீரிஸில் மையக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடித்துவருகிறார். நய்யாண்டி படத்துக்குப் பிறகு மீண்டும் நஸ்ரியா இந்த சீரிஸ் மூலமாக தமிழ் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.