துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்: படப்பிடிப்புக்கு போகும் ஐடியாவே இல்லையா?

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (11:20 IST)
துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்: படப்பிடிப்புக்கு போகும் ஐடியாவே இல்லையா?
அஜித் நடித்து வரும் ’ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் தற்போது அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் கலந்து கொண்ட படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இதனை அடுத்து அவர் எப்போது ’ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்து உள்ளது 
 
இந்த நிலையில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக அப்போது அவர் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள புனே செல்வார் என்றும் கூறப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்