ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெறமுடியும் - மோடி

புதன், 16 மே 2018 (14:41 IST)
224 சட்டசபை தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி தேர்தல் நடந்தது. மே 15 செவ்வாய்க்கிழமையன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

 
நேற்று மாலை பிரதமர் மோடி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
 
''பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பாதையில் நடைபோடுகிறது. கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை ஹிந்திமொழி பேசிய மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்டது. அது கற்பிதம்.
 
வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, மற்றும் அஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் வெற்றிபெற்றது. பிராந்திய மொழி பேசப்படும் பல மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 
மக்களுடன் மக்களுக்காக செயல்படும் கட்சி பா.ஜ.க. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் வெறும் அரசியல் லாபங்களுக்காக இந்திய அரசியலமைப்பை, இந்தியர்களின் உணர்வுகளை சேதப்படுத்தும் செயல்கள் வெறும் தேர்தல் அரசியலுக்காக நடைபெற்றன. மாநில-மத்திய அரசுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் மோசமானது.'' என்று மோடி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்