விடாமுயற்சி திருவினையாக்கும்.. செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

Siva
ஞாயிறு, 7 ஜூலை 2024 (20:15 IST)
அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அஜித்தின் அட்டகாசமான இரண்டு லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் சுறுசுறுப்பாக படப்பிடிப்பு ஒரு பக்கமும் தொழில்நுட்ப பணி இன்னொரு பக்கமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்